உச்சநீதிமன்றில் விமல் வீரவன்சாவின் டிஜிட்டல் அடையாள அட்டைப் திட்ட மனு விசாரணைக்கு
கடந்த 27 ஆம் திகதி உச்சநீதிமன்ற முன்றலில் ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சா, தாம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் 2025 அக்டோபர் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். இந்த மனு, இலங்கை – இந்தியா இடையே கையெழுத்தான டிஜிட்டல் அடையாள அட்டைப் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க வேண்டும் என கோருகிறது. குறித்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விமல் வீரவன்சா மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். […]









