உள்ளூர் செய்திகள்

2027ற்குள் காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய விசேட குழு நியமனம்.

  • Sep 4, 2025 - 09:43 PM
  • 0 Comments

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள […]

உள்ளூர் செய்திகள்

கடற்படை 40 ஆயிரம் தமிழர்களை கொன்றதாக தெரிவித்தமைக்கு ஆதாரம் இல்லை- வசந்த கரண்ணகொட

  • Sep 4, 2025 - 09:39 AM
  • 0 Comments

கடற்படை 40 ஆயிரம் தமிழர்களை கொன்றதாக தெரிவித்தமைக்கு ஆதாரம் இல்லையென வசந்த கரண்ணகொட நேற்று( 03-09) கடற்படை முன்னாள் கட்டளை தளபதி வசந்த கரண்ணகொட தெரிவித்துள்ளார இலங்கையில் கடற்படையின் பங்கு மற்றும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை (LTTE) முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பில் கடற்படை கட்டளை தளபதி வாசந்த கரண்ணகொட சுயசரிதை ‘The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism’ புத்தகம் அமேசான் விற்பனை நிறுத்தப்பட்டாலும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

312 மில்லியன் ரூபா பெருமதியான போதை பொருட்களை சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு கைப்பற்றியுள்ளது

  • Sep 4, 2025 - 09:25 AM
  • 0 Comments

சீதுவா, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஒரு தனியார் களஞ்சியத்திலிருந்து நேற்று (03-09) சுங்க போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் மிகப் பெரிய அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 312 மில்லியன் ரூபா ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருட்களில் 23,642 எக்ஸ்டசி (3,4 MDMA) மாத்திரைகள், மெத்தாம்படாமின் மாத்திரைகள், 1.445 கிலோ கிராம் கோக்கைன், 993 கிராம் ‘மாண்டி’ என அழைக்கப்படும் செயற்கை ரசாயன போதைப்பொருள் (MDMA என்றும் அறியப்படுகிறது), மற்றும் 98 […]

உள்ளூர் செய்திகள்

நெற்செய்கையாளர்கள் நெல் உற்பத்தி செலவினை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை

  • Sep 4, 2025 - 08:27 AM
  • 0 Comments

நெற்செய்கையாளர்கள் நெல் உற்பத்தி செலவினை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விவசாயிகள் நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களின் உற்பத்தி செலவுகள் எவ்வாறு உயர்ந்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு, சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுவதாவது, இவ்வாறு ஆய்வு செய்யப்படாததால் நெல் விலை நிர்ணயம் செயல்முறைப் பூர்வமற்றதாக இருப்பதாக தெரிவிக்கின்றார்கள் தேசிய வேளாண் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன், ‘அரசு விவசாய உற்பத்தி செலவுகளை சரியாக கணக்கிடவில்லை. தவறான மற்றும் சரியான தரவுகளின்றி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இதுவரை வெளியிடப்படாத பட்டலந்த ஆய்வுக்குழு அறிக்கையை ஜனாதிபதி வெளியிட வேண்டுமென கோரிக்கை

  • Sep 4, 2025 - 06:18 AM
  • 0 Comments

பட்டலந்த தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை நீண்டகாலம் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, பத்திரிகையாளரும்; ‘பாட்டலண்டாவை கிணித்தெழுவோம்’ நூலின் ஆசிரியர் நந்தன வீரரத்த்னே ஜனாதிபதி அநுரகுமார திசானாயக்க அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஜெமுனு ஜயந்த வன்னிநாயக்க நடத்தும் யூடியூப் ‘பவர் ஹவர்’ நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், ஜனாதிபதி அறிவித்துள்ள அதிகாரபூர்வ சட்ட நெறிமுறையை எனகூறிக் கொண்டு குறித்த அறிக்கையை மறைத்து வைத்திருக்கிறார் என்று குற்றம்சுமத்தியுள்ளார். ‘நான் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அறிக்கையை கேட்டதாகவும் ஆனால் 30 […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் குற்றமற்றவர் என தீர்ப்பு.

  • Sep 3, 2025 - 08:44 PM
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி இயக்குபவரை அச்சுறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவர் இவ்வாறு மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றமற்றவர் என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

கச்சதீவை சுற்றுலாத் தளமாக மாற்ற இடமளிக்கப்போவதில்லை.

  • Sep 3, 2025 - 08:31 PM
  • 0 Comments

கச்சத்தீவை சுற்றுலாத்தலமாக மாற்றும் யோசனையை யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ. ஜெபரட்ணம் அடிகளார் கடுமையாக எதிர்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பில் அவர் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்தார். ‘தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்’ என்ற கருப்பொருளில் அக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வமத மாநாடு நடைபெறவுள்ளதாகவும் பேரவை அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில் சர்வமத பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இன்று ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம்.

  • Sep 3, 2025 - 08:02 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று (புதன்கிழமை) மேலும் ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக, இன்னும் ஒன்பது எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று 10ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கிய நிலையில், இன்று 42ஆவது நாளாக […]

உள்ளூர் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கு விண்ணப்பம் கோரல்.

  • Sep 3, 2025 - 06:57 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்தில் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் படி, பேரவையின் செயலாளரான பதிவாளர், பொதுவிளம்பரம் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளார். விண்ணப்பிக்க விரும்புபவர் இலங்கைப் பிரஜையாகவும், 63 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நியமனம் பெறுபவர் மூன்று வருடங்களுக்கு, அல்லது அவர் 65 வயதை நிறைவு செய்யும் நாள் வரையிலோ — எது முதலில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட SSP சதீஷ் கமகேயின் விளக்கமறியல் நீடிப்பு

  • Sep 3, 2025 - 07:37 AM
  • 0 Comments

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஷ் கமகே, மேலதிக விசாரணைகள் முடியும் வரை வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்படும் நேரத்தில் கமகே, பொலிஸ் கலாசார பிரிவின் செயற்பாட்டு பணிப்பாளராக இருந்தார். லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, போதைப்பொருள் வர்த்தகர்கள், அமைப்புசார்ந்த குற்றக்குழுக்கள் மற்றும் பொலிஸ் சேவைகளை நாடிய பொதுமக்களிடமிருந்து மொத்தம் 14 மில்லியன் ரூபா வசூலித்ததாகக் கூறி அவரை கைது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp