உள்ளூர் செய்திகள்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • Sep 6, 2025 - 08:11 AM
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தங்காலை நகரசபை செயலாளர் உட்பட 15 பேர் பலி 16 பேர் படுகாயம்.

  • Sep 6, 2025 - 06:38 AM
  • 0 Comments

எல்ல–வெளவாயைச் சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது. விபத்து நேற்று (05-09) நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் எட்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் தங்காலை நகரசபை செயலாளர் டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்டோர் அடங்குகின்றனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் பதுளை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்கு விசாரணை நிறைவுபெற்றது- OMP

  • Sep 6, 2025 - 06:28 AM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 16,700 வழக்குகளில் 6,700 வழக்குகள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவ் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கத்துலந்த தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மீதமுள்ள சுமார் 10,000 வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அந்த முறைமை பொருத்தமற்றதென அறிவிக்க வேண்டுமென கபே தெரிவித்துள்ளது

  • Sep 6, 2025 - 06:19 AM
  • 0 Comments

கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டு வருவதால், அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி கபே அலுவலகத்தில் நேற்று (05-09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இவ்சந்திப்பில் மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையேற்றிருந்தார். மனாஸ் மக்கீன் மேலும் தெரிவித்ததாவது: 2008 முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் தீ விபத்து

  • Sep 6, 2025 - 06:07 AM
  • 0 Comments

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட பட்டாசு வாகனம் தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05-09) இரவு சப்பறத் திருவிழா நடைபெற இருந்தது. அந்த விழாவில் பயன்படுத்துவதற்காக பட்டாசுகள் கொண்டு வரப்பட்ட பட்டா ரக வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்கும் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. தீப்பற்றிய நிலையில் வாகனத்தில் இருந்த பட்டாசுகளும் தொடர்ச்சியாக வெடித்தன. தகவல் கிடைத்ததும் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவு பணியாளர்கள் […]

செய்திகள்

சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.

  • Sep 5, 2025 - 07:38 PM
  • 0 Comments

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். அத்தோடு, அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான், இந்த விலைக் குறைப்பை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.

  • Sep 5, 2025 - 07:09 PM
  • 0 Comments

மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி  திரு மிஹால் தலைமையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்திற்கு கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எதிரி தரப்பில் ஜனாதிபதி […]

உள்ளூர் செய்திகள்

கிணற்றை சுத்தம் செய்யச் சென்ற நபர் உயிரிழப்பு.

  • Sep 5, 2025 - 07:03 PM
  • 0 Comments

கல்தோட்டை, கல்டெமியாய பகுதியில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றைச் சுத்தம் செய்யச் சென்ற 39 வயது நபர் ஒருவர், மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். பலங்கொட, முல்கம பகுதியைச் சேர்ந்த இவர், இரண்டு நண்பர்களுடன் கிணற்றைச் சுத்தம் செய்ய முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கல்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கிணற்றில் நச்சு வாயுக்கள் தேங்கியிருந்ததால் அவர் மயக்கமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து கல்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையும் படியுங்கள்>செம்மணியில் […]

உள்ளூர்

செம்மணியில் இன்று 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்.

  • Sep 5, 2025 - 06:46 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 12ஆவது நாளாகவும் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் […]

உள்ளூர்

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் வேண்டாம்.

  • Sep 5, 2025 - 06:32 PM
  • 0 Comments

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக இன்று (05) காலை எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாருக்கு விஜயம் செய்தனர். சாந்திபுரம், சௌத்பார், தாழ்வுபாட்டு, தோட்டவெளி, ஓலைத்தொடுவாய், பேசாலை மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் மொத்தம் 13 காற்றாலை மின் கோபுரங்கள் (70 மெகாவாட் திறன்) அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து மக்களுடனான முதலாவது கலந்துரையாடல் சாந்திபுரம் மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர், அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பிரதேச […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp