உள்ளூர் செய்திகள்

அம்பாறையில் 38 வயது பெண் கொலை சந்தேக நபரை தேடி யாழ்ப்பாணத்தில் வலை வீச்சி

  • Sep 7, 2025 - 07:38 AM
  • 0 Comments

அம்பாறையில் இடம்பெற்ற பெண் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை தேடி அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர்  யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகியுள்ளனர். பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் வசித்த 38 வயதான, இரு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா கடந்த மே 30ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஜூன் 25ஆம் திகதி, குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய இரட்டையர் சகோதரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது […]

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது.

  • Sep 6, 2025 - 09:25 PM
  • 0 Comments

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 20.9 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராண்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் போதைப்பொருளுடனான அவரது பயணப் பொதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தாய்லாந்தில் இருந்து நாட்டை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது. இதையும் படியுங்கள்>மருதானை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது. […]

முக்கிய செய்திகள் விளையாட்டு

இலங்கை – சிம்பாப்வே T/20 தொடர் 1–1 என சமநிலை.

  • Sep 6, 2025 - 09:18 PM
  • 0 Comments

இலங்கை அணிக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று (6) இடம்பெற்றது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. போட்டியில் முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் கமில் மிசார […]

உள்ளூர் செய்திகள்

மருதானை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது.

  • Sep 6, 2025 - 09:13 PM
  • 0 Comments

கொழும்பு மருதானை, பஞ்சிகாவத்தை பகுதியில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடந்த சில நிமிடங்களிலேயே முகத்துவாரம் பொலிஸார், மாளிகாவத்தை போதிராஜ மாவத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரை கைது செய்தனர். இவர், திட்டமிட்ட குற்றவாளியான கெசல்வத்த கவி என்பவரின் நெருங்கிய நண்பர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து, முகத்துவாரம் பொலிஸாரின் மூவர் இணைந்து சந்தேக […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் 36 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

  • Sep 6, 2025 - 09:06 PM
  • 0 Comments

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (06) 36 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்தில் இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு தமது ஆதரவை போராட்டத்திற்கு வழங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட […]

உள்ளூர் செய்திகள்

செம்மணியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

  • Sep 6, 2025 - 07:59 PM
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (06) நிறைவடைந்துள்ளது. செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 ஆவது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. {{CODE […]

உள்ளூர் செய்திகள்

பதுளை எல்லா – வெல்லவாயை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் இழப்பீடு

  • Sep 6, 2025 - 09:11 AM
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை நகரசபை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எஸ்யூவி வாகனத்துடன் மோதியதையடுத்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • Sep 6, 2025 - 08:53 AM
  • 0 Comments

கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல்

  • Sep 6, 2025 - 08:47 AM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அமுலாகும். 1978 ஆம் ஆண்டின் பல்கலைக்கழகச் சட்டம் எண் 16 மற்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தச் சட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரத்திலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் வேந்தர் வாழ்நாள் […]

உள்ளூர் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிட்டு, NGO களுடன் அரசு மென்போக்குடன் நடக்கின்றது

  • Sep 6, 2025 - 08:17 AM
  • 0 Comments

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகள்(NGO)  தொடர்பான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைக்கான புதிய சட்ட முன்மொழிவை அரசு தாமதப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் வரைவு தயாரிக்கப்பட்டிருந்தபோதிலும், புதிய அரசு இதனை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, NGOகளின் செலவினங்கள் கண்காணிப்பின்றி நடைபெறுவது மற்றும் நாட்டின் தேசிய நலனுக்கு விரோதமாக செயற்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனினும், பெரும்பாலான NGOகள் மனிதாபிமான பணிகள், தொண்டு சேவைகள் மற்றும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp