உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சார சபையை மறுசீரமைக்க முனைந்தால் முழுமையான வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்படும்- தொழிற்சங்கம்

  • Sep 10, 2025 - 08:48 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது தொழிற்சங்கங்களின் இடையறாத வேலைநிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் கூட இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது இலங்கை நிதஹஸ் சேவக சங்கமயா (SLNSS) தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள சபையை நான்கு தனித்தனி அலகுகளாகப் பிரிக்கும் திட்டத்துக்கு எதிராக ‘விதிமுறைகளுக்குள் வேலை செய்வது’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்த, மைத்திரி, மற்றும் சஜித்தின் தயார் ஆகியோருக்கு காற்று புடுங்கப்படுகின்றது.

  • Sep 10, 2025 - 08:22 AM
  • 0 Comments

பாராளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (09) அறிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும்“Presidents’ Entitlements (Repeal) Bill” அரசியலமைப்பிற்கு முரணானதாக எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எனவே, இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும்; வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வீடு, போக்குவரத்து வசதிகள், பிற சலுகைகள், மாதாந்திர கொடுப்பனவு, செயலாளர் கொடுப்பனவு மற்றும் […]

உள்ளூர் செய்திகள்

சதொசவில் 24 பில்லியன் நட்டம்,5 பில்லியன் கடன்,11 பில்லியன் நிலுவை- பிரதிஅமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன

  • Sep 10, 2025 - 08:12 AM
  • 0 Comments

சதொச வர்த்தக நிறுவனத்தில் 24 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், அதனுடன் 5 பில்லியன் ரூபா கடனும், 11 பில்லியன் ரூபா வழங்குநர் நிலுவையும் இருப்பது தெரியவந்துள்ளதென வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதிஅமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டுகளில் சதொசா 24 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்ததுடன், 5 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதையும், 11 பில்லியன் ரூபா அளவுக்கு வழங்குநர்களிடம் கடன் நிலுவை இருப்பதையும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எல்லா – வெல்லவாயை விபத்திற்கு சாரதியே காரணம்- பிரதி பொலிமா அதிபர்

  • Sep 10, 2025 - 08:05 AM
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை பிரதான வீதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேருந்து விபத்து, ஓட்டுநரின் அலட்சியத்தினால் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொடா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ஆம் திகதி 24வது மைல் கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றது. தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா பயணத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 17 […]

உள்ளூர் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

  • Sep 10, 2025 - 07:41 AM
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வு திங்கட்கிழமை (08-09) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றபோது, இலங்கையை மொத்தம் 43 நாடுகள் ஆதரித்துள்ளது இந்த நாடுகளில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) சார்பில் குவைத் மற்றும் அதனுடன் பஹ்ரைன், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் எத்தியோப்பியா, கோட் திஸ்வாயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு, தாய்லாந்து, வானுவாட்டு, வட கொரியா, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, […]

உள்ளூர் செய்திகள்

வெளியானது! கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைதான காட்சி.

  • Sep 9, 2025 - 09:27 PM
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைதாகிய இலங்கை குற்றவாளிகள் தொடர்பான முழுமையான காணொளி வெளியாகியுள்ளது. குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் கைது செய்யப்படும் தருணத்தை, அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார். முதலில் கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு நிலங்க கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோரும் கைதுசெய்யப்படுகின்றனர். இதையும் படியுங்கள்> ரவிராஜ் கொலை சந்தேகநபர் – இரசாயனக் கிடங்கு வழக்கில் கைது. https://www.youtube.com/@pathivunews/videos

உள்ளூர் செய்திகள்

ரவிராஜ் கொலை சந்தேகநபர் – இரசாயனக் கிடங்கு வழக்கில் கைது.

  • Sep 9, 2025 - 08:31 PM
  • 0 Comments

தென்னிலங்கையின் மித்தெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனக் கிடங்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேகநபர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான பியல் மனம்பேரி ஆவார். 2006ஆம் ஆண்டு கொழும்பு நாரஹேன்பிட்டியில் நடந்த ரவிராஜ் படுகொலைக்காக இவர் மீது சந்தேகத்தின் பேரில் அப்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிவில் விமான ஆணையத்தின் உயர்மட்ட பதவிகளுக்கான நியமனத்தில் அரசியல் தலையீடென ஊழல் எதிர்ப்பு அமைப்பு குற்றச்சாட்டு

  • Sep 9, 2025 - 07:09 AM
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு அமைப்பு, சிவில் விமான ஆணையத்தின் (CAA) உயர்மட்ட பதவிகளில் அரசியல் தலையீடு இடம்பெறுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அதனை நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நிரோஷன் படுக்கா நேற்று (08-09) நடைபெற்ற ஊடக சந்திப்பில், அரசாங்கம் தகுதியற்ற நபர்களை அரசியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு CAA-வின் முக்கிய பதவிகளில் நியமிக்கத் திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். அவர் குறிப்பிட்டதாவது, ‘2023ஆம் ஆண்டில் ஊயுயு 5,530 ரூபா மில்லியன் லாபம் ஈட்டியது. இலங்கையின் பெயரை உலக […]

உள்ளூர் செய்திகள்

மின் கட்டணத்தை உயர்த்துவதற்குப் பதில் 20% குறைக்க வேண்டுமென மின்சார நுகர்வோர் சங்கம் வேண்டுகோள்

  • Sep 9, 2025 - 06:57 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சார கட்டணங்களை உயர்த்த கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மின்சார நுகர்வோர் சங்கம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட திருத்தக் கோரிக்கையின் அடிப்படையில், மின்சார சபை 6.8% கட்டண உயர்வை கோரியுள்ளது. இது தொடர்பில் ECA பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிகா, ‘அவர்கள் ஆறு சதவீதத்திற்கும் மேல் கட்டண உயர்வை கேட்கிறார்கள். ஆனால் இப்போது அதற்கு தேவையில்லை. கடந்த காலாண்டில் மட்டும் ரூ.5 […]

உள்ளூர் செய்திகள்

புதிய அரசு இதுவரை முன்னெடுத்த முன்னேற்றங்களை மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் விஜித ஹேரத்

  • Sep 9, 2025 - 06:44 AM
  • 0 Comments

பொறுப்புகூறும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இலங்கை அரசாங்கம், உள்நாட்டுப் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு தலையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பொறுப்புகூறல் செயல்முறைகள் முழுமையாக உள்நாட்டு நடைமுறைகளின் மூலம் மட்டுமே முன்னெடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60ஆவது அமர்வில் (சுவிட்சர்லாந்து ஜெனீவாவில்) மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp