உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது கொலைவெறி தாக்குதல்

இன்று கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கரந்தன் பிரதேசத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று (26) மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்

அபோது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களும் தற்காப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதனையடுத்து திரும்பிச் சென்ற நால்வர் கொண்ட குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரோடு திரும்பி வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்

தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

படுகாயமடைந்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்

ச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp