செய்திகள்

இந்தியாவை எதிர்த்தே வந்த ஜேவிபி. இந்திய பிரதமரின் இலங்கை விஜயததினை கையாள தெரியாதுள்ளது- ஹர்ஸா டி சில்வா எம்பி

இந்தியாவுடனான நட்புறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக ஆணவப் பேச்சுக்களால் அதனை சீர்குலைக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளாதார மாநாடொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2044இல் 30 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை அடைவதே இந்தியாவின் இலக்காகும்.

உலகில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடு இந்தியாவாகும்.
எமக்கு அவ்வாறான இந்தியாவுடன் பலமான பாலமொன்றை அமைத்துக் கொள்ள முடியாது போயுள்ளது.

இந்தியாவுடன் மாத்திரமின்றி ஏனைய நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்தவர்கள், இந்தியாவுக்கு எதிராக மனிதப் படுகொலைகளைச் செய்தவர்கள் தற்போது பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவருடன் சென்று எவ்வாறு சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பது என்பதே அவர்களுக்குள்ள தற்போதைய பிரச்சினையாகும்.

பொருளாதார ரீதியிலான இராஜதந்திர உறவுகளிலிருந்து விலகி, ஆணவம் கொண்ட பேச்சுக்களால் தற்போது இந்தியாவுடனுள்ள நட்புறவையும் பகைத்துக் கொள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

மூடிய பொருளாதாரம் கொண்ட சிறிய நாடுகளால் அபிவிருத்தியடைய முடியாது.
இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கூட டிரில்லியனுக்கும் அதிக பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.

எமக்கு மிகவும் அண்மையிலுள்ள தென்னிந்திய மாநிலங்களே இவ்வாறு பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.

எனவே இவற்றிடமிருந்து நாம் பொருளாதார ரீதியில் பயன்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp