உள்ளூர் செய்திகள்

மலையக பெண் ஆளுமையொருவர் நீதவானாக நியமனம் பெறுகிறார்

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஸ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆசேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில்இ அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார்.

இவர் பண்டாரவளை நீதிமன்ற பிரபல சட்டத்தரணி சிரில் ராஜ்ஜின் மனைவியும் பசறை ஜெயந்தி பேக்கரி உரிமையாளரான ராசு புஸ்பராஜ் ஜெயந்தி ராணி தம்பதியினரின் மகளும் ஆவார்.

இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் முதலாவது நீதிபதியும்இ பெண் நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை பசறை தமிழ் தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் உயர்தர கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலையிலும் நிறைவு செய்துள்ளார்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பீடத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் சட்டக் கல்லூரியிலே தனது தொழில்நிலை படிப்பை முடித்தது பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களாக பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்திலும் தொழில் நியாய சபை நீதிமன்றத்திலும் சேவையாற்றியுள்ளார்

மலையக மக்கள் சார்ந்து பல்வேறு வழக்குகளில் சட்டத்தரணியாக கடமை புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp