உள்ளூர் செய்திகள்

ஓய்வூதியத்தை எதிர்பார்த்து காத்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்- பாராளுமன்ற உறுபப்pனர் ரவிகரன்

கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந நிலையில், ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரியவர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பாhளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் மீதான வரவு,செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு 2020-01-01 இல் வழங்குவதற்குரிய ஓய்வூதியமானது நாட்டின் நிலமை காரணமாக கோத்தபாய அமைச்சரவையினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சார்பான ஓய்வூதியர் சங்கத்தினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது அவ்வாறு போராடிய தேசிய மக்கள் சக்தி ஆதரவு தொழில் சங்கங்கள் தேசியமக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பிரச்சனை தீர்க்கப்படும் என நம்பிக்கையூட்டி வந்தனர்.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை ஓய்வுபெற்ற பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு,செலவுத் திட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

அதாவது 2020ஆம் கிடைக்கவேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு 2025ஆம் ஆண்டுவரை, ஐந்தாண்டுகளாக பெறமுடியாது காத்திருந்தவர்களுக்கு தற்போது வரவு,செலவுத் திட்டத்தில் அந்தக் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக 2027வரை வழங்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளளது.

இக்கொடுப்பனவு பெறவேண்டிய 2000 பேரளவிலான ஓய்வூதியர்கள் இறந்து விட்டனர்.
இந்நிலையில் தற்போதைய அரசும் ஓய்வூதியர் வாழ்வுக் காலம் பற்றி சிந்திக்காது, குறித்த ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்குவதை மேலும் மூன்றாண்டுகளுக்கு பிற்போட்டுள்ளதென கவலையடைந்துள்ளதாக ரவிகரன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp