உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தேசபந்து தென்னக்கோனின் ரிட் மனுவை நிராகரித்த ; மேன்முறையீட்டு நீதிமன்றம் கைது செய்ய உத்தரவு

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (12-03) அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ரிட் மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதவான் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp