உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடற்தொழில் அமைச்சரை தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து,

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது , மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே அப்பகுதி இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பொன்னாலை – பருத்தித்துறை கரையோர பிரதான வீதி புனரமைக்கும் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை முடித்துக்கொண்டு அமைச்சர் செல்லும் போதே இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp