உலகம்

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக தயார் என ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்

e0ae89e0ae95e0af8de0aeb0e0af88e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aea8e0af87e0ae9fe0af8de0ae9fe0af8b e0ae89e0aeb1e0af81e0aeaae0af8d | Pathivu News

உக்ரைன் மீது ரஸ்சியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன.

இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.

ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ; பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன்.

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.

உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ர ரஸ்சியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே, டிரம்ப ரஸ்சியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும்.

இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp