Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்ஓய்வுபெற்ற நீதியரசர் அல்விஸின் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் அல்விஸின் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை சிறில் காமினி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொரளையிலுள்ள அமைந்துள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சிறில் காமினி இவ்வாறு தெரிவித்தார்.

‘கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸை இந்தக் குழுவின் தலைவராக நியமித்தன் மூலம் உறவினர்களுக்கிடையே மோதல் உடனடியாக உருவாகும் என்பது தெளிவான உண்மை.

எனவே, அவ் அறிக்கையை பக்கச்சார்பற்ற சுதந்திரமான அறிக்கை என கத்தோலிக்க திருச்சபை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாது என அருட் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments