இந்தியா செய்திகள்

பிரதமர் மோடி பாவங்களை போக்க புனித நீராடினாரா என நடிகர் பிரகாஸ் ராஜ் கிண்டல்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.ய

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

இந்த வரிசையில் இன்று தனி விமானம் மூலம் பிரயாக்ராஜ் சென்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் நீராடியதை விமர்சிக்கும் விதமாக நடிகர் பிரகாஸ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சிறுவனின் காயத்திற்கு குநஎஙைரiஉம தடவிய நர்ஸ்
அவரது பதிவில், ‘சுப்ரீம் தலைவர் புனித நீராடினார். இது அவர் செய்த பாவங்களுக்கான பிராய்சித்தமா?’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக போலியான படங்கள் பரப்பப்பட்டது. அந்த பதிவுகளில் பிரகாஸ் ராஜ் தனது பாவங்களை போக்க புனித நீராடினார் என்று பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp