உலகம்

அமெரிக்கர்களின் வருமான வரியை ரத்து செய்ய டிரம்ப் திட்டமிட்டுள்ளார்

e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aeb0e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aeb5e0aeb0e0af81e0aeaee0aebee0aea9 e0aeb5 | Pathivu News

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவியேற்றுக்கொண்டதில் இருந்து பல தடாலடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கான வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் தன்னிடம் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வருமான வரிக்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த போவதாகவும் இதன் மூலம் அமெரிக்க மக்களைப் பணக்காரர்களாக ஆக்க முடியும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பெடரல் அரசும் மாகாண அரசும் தனித்தனியாக வருமான வரி விதிக்கின்றன.

அவ்வகையில் பெடரல் அரசின் வருமான வரியை ரத்து செய்யும் திட்டம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மாகாண அரசுகளின் வருமான வரி குறித்து சம்பந்தப்பட்ட மாகாண அரசுகளே முடிவெடுக்கும்.

பொதுமக்களின் வருமான வரியை டிரம்ப் ரத்து செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதிகரித்த இறக்குமதி செலவுகள் காரணமாக அதிக வட்டி விகிதம் ஏற்படும் என்று சில பொருளாதார வல்லுநர்கள் எச்செரிக்கை விடுத்துள்ளார்கள்

 

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp