உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

e0ae87e0aeb8e0af8de0aeb0e0af87e0aeb2e0af8d e0aeb2e0af86e0aeaae0aea9e0aebee0aea9e0af8d e0aeaae0af8be0aeb0e0af8d e0aea8e0aebfe0aeb1 | Pathivu News

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் டொனால்டு டிரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறிய அளவில் சண்டையை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

நேற்றும் இஸ்ரேல் படைகள் 22 பேரை கொன்ற நிலையில் போர் நிறுத்தம் என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே இருக்கிறது என லெபனான் சுகாதார துறை தெரிவித்தது.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp