முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றியிருந்தார்.

இந்த நிலையில் கதவின் பூட்டை உடைத்த குற்றச்சாட்டில் மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நிர்வாக மட்டத்தில் இருந்து இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp