முக்கிய செய்திகள்

திருவள்ளுவரும் யாழ்ப்பாண கலாசாரமும் இந்தியாவின் கையில் அல்லோலகல்லோலப்படுகின்றது

இந்தியாவின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு ‘யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்’ என மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது

இந்தியாவின் நன்கொடையால் நிர்மாணிக்கப்பட்ட ‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்’ 2023ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்திய தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் அக்கட்டடத்துக்கு ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என பெயர் சூட்டப்பட்டிருந்தது

‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்’ என்ற பெயர் மாற்றப்பட்டு, ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள் உட்பட பல தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில்

இன்றைய தினம் இக்கட்டடத்தில் ‘யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்’ என மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp