செய்திகள்

நாமல்  நிதி மோசடி செய்தாரா? விசாரணை ஆரம்பம்

e0aea8e0aebee0aeaee0aeb2e0af8d e0aea8e0aebfe0aea4e0aebf e0aeaee0af8be0ae9ae0ae9fe0aebf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebee0aeb0 | Pathivu News

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஸ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று வழக்கு விசாரணைக்கு அழைத்த போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனி விசாரணையை ஆரம்பித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, கிரிஸ் நிதி மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் வழக்கை ஜூன் 4ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp