நாடாளுமன்ற ளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தம் வெளியிட்டுள்ள பிமல் ரத்நாயக்க இந்த சம்பவத்துக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்தள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சபை முதல்வரும், சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார்.
இதற்கு பதிலளிக்கையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
இவ்விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விமான நிலைய தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கும் இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்த விடயங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்பில் ஆகவே இவ்விடயம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவில் விசாரணைக்குட்படுத்தப்படுமாயின் திணைக்களத்தை அழைக்க முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தடைகிறோம்.
இந்த சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக குறிப்பிடுவது அடிப்படையற்றது.
இவர் நாட்டுக்கு திரும்பி வருகையில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை.
ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு ஏதும் கிடையாது என தெரிவித்துள்ளார்
