உலகம்

பூமியின் கடைசி நாடு நோர்வே என்றால் நீங்கள் நம்புவீர்களா?

e0aeaae0af82e0aeaee0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0ae95e0ae9fe0af88e0ae9ae0aebf e0aea8e0aebee0ae9fe0af81 e0aea8e0af8be0aeb0e0af8d | Pathivu News

பொதுவாக விடியல் வந்தால் நிச்சயம் இரவு வரும். மீண்டும் விடியும் என்பதுதான் தெரியும்.

ஆனால் இங்கு 6 மாதம் விடியல் மட்டுமே இருக்கும்.

அடுத்த 6 மாதம் இரவு மட்டுமே இருக்கும். இந்த நாடுதான் பூமியின் கடைசி நாடாகவும் உள்ளது.

இப்படி 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் இருக்கும் நாடான நார்வேயில் ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவு பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகின்றோம்.

இங்கு பகல், இரவு 6 மாதங்கள் நீடிக்க அதன் அமைவிடம்தான் காரணமாக உள்ளது.
அதாவது இது பூமியின் கடைசி நாடாக இருப்பதால், அது தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில் இந்த நாடு அமைந்துள்ளது.

எனவேதான் இதன் இரவு 6 மாதமும், பகல் 6 மாதமும் நீடிக்கிறது.
6 மாத இரவின் போது சூரியன் அடிவானத்திற்கு கீழ் மறைந்திருக்குமாம்.
அதற்கு போலார் நைட் என்று அழைக்கின்றனர்.

அந்த இரவை காண கண்கோடி வேண்டும் என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்.
இதற்காகவே இந்த இரவை அனுபவிக்க பலர் நோர்வே செல்கின்றனர்.

இந்த இரவானது அக்டோபர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கிறது.
ஏன் அது வசீகரிக்கும் இரவு என்று சொல்லப்படுகிறது தெரியுமா..?

சூரியன் வானின் அடிப்பகுதியில் ஒளிந்திருப்பதால் ஸ்வால்பார்ட் பகுதி முழுவதும் சூரியனின் வெளிச்சம் பட்டும் படாமலும் தெரியும்.

இதனால் வானம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும்.

அதன் பிரதிபளிப்பு பளிங்கு கற்களைபோல் ஒளிரும் பனிக்கட்டிகள் மீது காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக அமைகிறது.

இதன் அழகை காணவே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு குவிகின்றனர்.

இங்கு மற்றுமொரு அரிய நிகழ்வு என்னவெனில் நடு இரவில் சூரியனை பார்க்கலாம்.
அதாவது ஏப்ரல் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை ஸ்வால்பார்ட் தீவில் கப்பலில் பயணம் செய்தால் நள்ளிரவில் சூரியன் தெரியும்.

சூரியனுக்கு கீழ் நீங்கள் பயணம் செய்வீர்கள்.

அதிலிருந்து வீசும் ஒளி பல வண்ணங்களை நம் மீது தூவிச் செல்லும்.

அந்த வண்ணங்கள் அந்த பகுதியை ரம்மியமான அழகால் கொள்ளைகொள்ளும்.
இந்த நாட்டில் பகல் , இரவு எப்படி இருந்தாலும் வாழ்க்கை தரம், பொருளாதாரம் தங்குதடையின்றி நடந்துக்கொண்டிருக்கிறது.

Pathivu News

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp