தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
