உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 3 பிணைக்கைதிகளும் இஸ்ரேல் திரும்பினர்

e0aeb9e0aeaee0aebee0aeb8e0af8d e0ae85e0aeaee0af88e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0aebee0aeb2e0af8d e0aeb5e0aebfe0ae9fe0af81e0aeb5 | Pathivu News

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும்.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர்.

பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர்.
போர் நிறுத்தம் நேற்று மதியம் 12 மணிக்கு அமலுக்கு வரவிருந்தது.

ஒப்பந்தப்படி இருதரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்கள் பெயர் விவரங்களை 24 மணி நேரத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும்.

இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது.

ஆனால் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் விவரங்களை வெளியிடவில்லை.

சுமார் 2 மணி நேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது.

அதன்படி, ரோமி கொனின் ( 24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை செய்யப்பட்ட 3 பிணைக்கைதிகளும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

 

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp