இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தலில் 981 வேட்பாளர்கள் களத்தில்

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்படி, மொத்தம் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புதுடெல்லி தொகுதியில் அதிக அளவாக மொத்தம் 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஸீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்தும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp