செய்திகள்

கத்தோலிக்க மக்களின் இரத்தத்தில் உதயகம்மன்பில அரசியல் செய்யக்கூடாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை

e0ae95e0aea4e0af8de0aea4e0af8be0aeb2e0aebfe0ae95e0af8de0ae95 e0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0ae87e0aeb0e0aea4e0af8d | Pathivu News
Pathivu News
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவை திருச்சபை கோரவில்லையென அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய தலைவர் குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் எனவும் சிஐடியினர் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என ஊடக பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டதோ அல்லது ஷானி அபயசேகர மீண்டும் பணிக்கமர்த்தப்ட்டமை பற்றி கத்தோலிக்க திருச்சபைக்கு பிரச்சினையுமில்லை என அருட்தந்தை சிறி;ல் காமினி பெர்ணாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் பேரழிவு குறித்து பெருமளவு அறிக்கைகள் வெளியாகியுள்ளன, சிஐடியினர் இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கட்டும், அவர்கள் உண்மையை கண்டுபிடிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கம் ஷானி அபயசேகரவை நீக்கிய பின்னர் தாக்குதல் குறித்து விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை
தொடர்ச்சியான அரசியல் தலையீடுகளால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் இலாபம் தேடுவதற்காக உதயகம்மன்பில இந்த விடயத்தை கையில் எடுத்தாரா என அருட் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp