யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, நாரந்தனை கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு இன்று (27.11.2026) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பத்தின் பெண் தலைமைத்துவத் தாயின் இரண்டு மகன்களும் யுத்தத்தில் உயிரிழந்துள்ளதுடன், மகளொருவரும் அங்கவீனமடைந்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு துயரங்களை எதிர்கொண்டுள்ள குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட வீட்டினை, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் இன்று உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
வீடு கையளிக்கும் நிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் வனஜா செல்வரட்ணம், நாரந்தனை கிராம அலுவலர் ஏ. டன்ஸ்ரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இரு மகன்களை யுத்தத்தில் இழந்து, அங்கவீனமடைந்த மகளுடன் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கப்பட்டமை, அக்குடும்பத்தின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


What’s your Reaction?

