இலங்கை தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள்,கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.




