உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்துடன் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை இணைக்கத் திட்டம்..!

plan to merge the national institute of social development with the university of kelaniya | Pathivu News
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான இறுதித் தீர்மானம் பல்கலைக்கழகத்துடனான கலந்தாலோசனைகளின் பின்னரே எடுக்கப்படும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் அரச சார்பற்ற நிறுவனம் அல்ல என்றும், அது அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட அரச நிறுவனமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தும் சட்டக் கட்டமைப்பு இந்நிறுவனத்திற்குப் பொருந்தாது எனவும், அரச நிறுவனமொன்றை அரச பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான பொருத்தமான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்டரீதியான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சாத்தியவள ஆய்வு அறிக்கையில், அந்தச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கக்கூடிய மாற்று வழிமுறைகள் மற்றும் தற்போதுள்ள ஊழியர்களை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்வாங்குவது தொடர்பான ஏற்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2025 மார்ச் 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில், இந்நிறுவனத்தைக் களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் யோசனை பரிசீலிக்கப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட சாத்தியவள ஆய்வின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் களனிப் பல்கலைக்கழகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டுமென ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இது கல்விசார் விடயங்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், களனிப் பல்கலைக்கழகத்தின் செனற் சபை மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பல்கலைக்கழக மட்டத்திலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்தாலோசனைகளை நிறைவு செய்து பல்கலைக்கழகம் தனது நிலைப்பாட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள போதிலும், நடைமுறைப்படுத்துவதற்கான இறுதிச் செயற்பாடுகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊