இன்றைய தினம் (19.11.2026) நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 17 ஆவது அமர்வில் 2027 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ்
அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைவாக தவிசாளரினால் 16 கோடி 15 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் (Rs 161515000.00) உத்தேச வருமானத்தை எதிர் பார்ப்பதாக தெரிவித்ததுடன்,
பிரதேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு சபையினால் மேற்
கொள்ள வேண்டிய திண்மக் கழிவகற்றல்,தெருமின் விளக்குகள் திருத்தம் பொருத்துதல், கான் துப்பரவு செய்தல் போன்றவற்றுடன் அனர்த்த நிவாரணம், வாழ்வாதாரம், விளையாட்டு
கல்வி,கலை,கலாச்சார நிகழ்ச்சிகள்,
புலமைப் பரிசில் திட்டங்கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் சுய தொழில் வாய்ப்பு கள் போன்றவற்றுக்கான உத்தேச செலவாக 16 கோடி 15 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் (Rs 161512500.00) மதிப்பிட்ட செலவாக கௌரவ தவிசாளரினால் முன்வைத்தமையை விசேடமாக குறிப்பிட்டுக் கூறலாம்.
நிருபர்
கே எ ஹமிட்


What’s your Reaction?

