யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க சென்றவர் மீது இன்றைய தினம் வியாழக்கிழமை சரமாரியான வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் படுகாயமடைந்தவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஒன்றில் சாட்சியமளிக்க , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து , ஊர்காவற்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , அராலி சந்திக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?

