உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நாமல் மீதான வழக்கு நிறைவு..!

case against namal concludes at colombo fort magistrates court | Pathivu News
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணச்சலவை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்வதாகக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18.11.2026) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பான ஆரம்ப அறிக்கையும் சான்று பொருட்களும் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றில் அறிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களம், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.
மேலும், இந்தச் சம்பவத்தின் முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணப் பரிசோதனை அறிக்கை இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.
அத்துடன், பிரியங்கா நியோமாலி மற்றும் சமிந்திர ராஜபக்ஷ ஆகிய இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக தற்போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ, இதே சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு இணங்க, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (19.11.2026) வரை அவரைச் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய, இந்த வழக்கைக் கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து நிறைவு செய்யுமாறு விசாரணை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், எயார்பஸ் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கை நிறைவு செய்வதாக உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊