செய்திகள்

இளங்குமரனான பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மடக்கிப்பிடித்த டிப்பர் யாருடையது (காணொளி இணைப்பு )

e0ae87e0aeb3e0aeaee0ae95e0af81e0aeaee0aeb0e0aea9e0aebee0aea9 e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1 | Pathivu News

 

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பரை வழிமறித்து தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த சம்பவம், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியில் சட்டவிரோதமான முறையில் கண்டற் கற்களை அகழ்ந்து செல்லப்படுவதாக பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தினர்
பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து டிப்பரை மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி கற்கள் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த டிப்பர் ரக வாகனத்தை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp