சம்பூர் ஆலங்குளத் துயிலுமில்லத்தில் தொடர்ச்சியாகச் சிரம தானப் பணிகள் நடைபெறுகின்ற போதிலும் அதில் பொது மக்கள் கலந்து கொள்வது மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது
துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவும் அதில் கலந்து கொள்ளவும் அரசாங்கத்தினாலோ அல்லது பாதுகாப்புத் தரப்பினராலோ எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை. எனவே அச்சுறுத்தல்கள் ,தடைகள், விசாரணைகள் போன்றவை இருப்பதாக யாரேனும் வதந்திகளைப் பரப்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் …..
அச்சமின்றி அனைவரும் சிரம தானப்பணிகள் மற்றும் நினைவேந்தல் செயற்பாடுகளில் சட்டத்திற்குட்பட்டு கலந்து கொள்ள முடியும் என்பதனை நாம் அனைவருக்கும் பகிரங்கமாக அறியத்தருகின்றோம்.
நாளைய தினம் காலை 9.00 – 4.00மணிவரை திருகோணமலை நகரப் பகுதி மக்கள், தம்பல காமம், திரியாய், குச்சவெளி, வெருகல் போன்ற தூரப் பிரதேச மக்களுக்கான சிரம தான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துயிலுமில்லத்தில் தற்போது பெண்கள் செய்யக் கூடிய சிறிய வேலைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதனால் ஆண்கள் மட்டும் கத்தி கோடரி போன்றவற்றுடன் கலந்து கொள்ளவும்.
சிரமதானப் பணிகளில் கலந்து கொள்ள முடியாதவர்களும் தாங்கள் தங்களால் முடிந்த பொருளுதவி மற்றும் பண உதவிகளை வழங்கலாம் என்பதனால் தங்களுக்குத் தேவையான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்றுக் கொள்ள 0702923576 என்கிற இலக்கத்துடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரைத் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/2566651557162906
What’s your Reaction?

