உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சமூக வலைத்தளக் கட்டுப்பாட்டுச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்களும் காலத்தின் தேவை..!

social media regulation law and amendments to the prevention of terrorism act are a timely necessity | Pathivu News

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனோஜனை விடுவிப்பதற்கு முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்னெடுத்த முயற்சிகளுக்குத் தமிழ் தரப்பினர் விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களில் சில திருத்தங்கள் அவசியம் எனவும் உலமா கவுன்சிலின் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அனோஜனை விடுவிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்தை விட முதலாவதாகக் களமிறங்கியவர் பைசர் முஸ்தபா அவர்களாவார். அவர் தனது சொந்தச் செலவில் இப்பயணத்தையும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அரசாங்கம் தமது கடமையைச் செய்வதற்கு முன்வந்தது. எனவே, அரசாங்கத்திற்கு அப்பால் நின்று அவர் ஆற்றிய இந்த மனிதாபிமானச் சேவை நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதாகும். இவ்விடயத்தில் ஏனைய சிலர் எவ்விதப் பங்களிப்பும் இன்றி வெறும் விளம்பரங்களுக்காக மட்டுமே செயற்பட்டனர்.. பைசர் முஸ்தபாவின் இப்பணியை அங்கீகரித்து தமிழ் தரப்பினர் அவரை அழைத்து விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இது தவிர அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமானது இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்று நாட்டில் இனவாதம் பெரிதாகப் பெருக்கெடுத்து ஓடுவதற்குச் சமூக வலைத்தளங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாதிருப்பதே முதன்மைக் காரணமாகும். எனவே, சமூக வலைத்தளங்களை நெறிப்படுத்துவதற்கான சட்டங்கள் கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களைத் தடுப்புக்காவல் உத்தரவின் (DO) கீழ் பொலிஸ் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் வைத்திருக்காது, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். மூன்று மாதங்களுக்கு மேல் தடுப்புக்காவல் உத்தரவு (DO) நீடிக்கப்படக்கூடாது என்ற சட்ட ஏற்பாடு உருவாக்கப்பட்டால், அது நீதித்துறையின் சுயாதீனத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வழிவகுக்கும் என முபாறக் முப்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிருபர்
பாறுக் ஷிஹான்

Pathivu NewsPathivu News

 

 

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊