உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒரே விமானத்தில் வந்த மூவரிடமிருந்து ரூ. 13 கோடி பெறுமதியான குஷ் மீட்பு..!

kush worth rs 130 million seized from three passengers on the same flight | Pathivu News
எட்டு கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையுடன் மேலும் இருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 35 வயதுடைய நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என்றும் மற்றைய நபர் 46 வயதுடைய கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இந்தப் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தில் விலைக்கு வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்துள்ளதுடன், அங்கிருந்து மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 179 இலக்க விமானம் மூலம் இன்று (16.11.2026) அதிகாலை 12 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் இருந்த மதுபான போத்தல்கள் பொதி செய்யப்பட்டிருந்த நான்கு பெட்டிகளில் இருந்து போத்தல்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த ‘குஷ்’ ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போதைப்பொருள் தொகை நான்கு பக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்ததுடன், அதன் மொத்த எடை 8 கிலோகிராம் 664 கிராம்கள் ஆகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (16) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்புக் காவல் கட்டளைகளைப் பெற்று, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக அதே விமானத்தில் வருகை தந்த மற்றொருவரும் ரூ. 4 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்ப நிபுணரொருவர் என்பதுடன் அவரும் தாய்லாந்தில் போதைப்பொருளை விலைக்கு வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்து, அங்கிருந்து இலங்கை வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊