செய்திகள்

களமாடினார் இளங்குமரன் எம்.பி

e0ae95e0aeb3e0aeaee0aebee0ae9fe0aebfe0aea9e0aebee0aeb0e0af8d e0ae87e0aeb3e0ae99e0af8de0ae95e0af81e0aeaee0aeb0e0aea9e0af8d e0ae8ee0aeae | Pathivu News

சட்டவிரோதமாக சுண்ணக் கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சந்தேக நபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்திலிருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்குச் சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் சுண்ணக் கற்கள் அகழ்ந்து செல்வதற்கு எதிராக பிரதேச மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது

இது தொடர்பில் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மக்கள் முறையிட்டிருந்தனர்

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேற்றிரவு (02) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி சுண்ணக் கற்களை ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பாரவூர்தி மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp