தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று வியாழக்கிழமை (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ள தயாராக இருந்தது.
இதன் போது அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் அனுமதி பெற்று கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்
அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெற்று இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போதே கிளிநொச்சி பொஸிசார் அதனை தடுத்துள்ளனர்