கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (03.11.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (03.11.2026) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வழக்கு கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
பிணை கோரிக்கை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமரப்பணங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?

