யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்குக்கான வினைத்திறன் மிக்க பேருந்து சேவைகளை நடத்துமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் , உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
வடமராட்சி கிழக்கில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் , அதிகளவான பயணிகள் பயணித்தமையால் , நாகர்கோவில் சந்தியில் பயணத்திற்காக காத்திருந்த நோயாளிகள் , மாணவர்கள் , வேலைக்கு செல்வோர் ஆகியோரை பேருந்து ஏற்றாமல் சென்றுள்ளது.
அதனால் பலரும் தமது பயணத்தை தொடர முடியாது, பரிதவித்து நின்றுள்ளனர். பின்னர் , அவ்வீதி வழியாக வந்த தனியார் வாகனங்களில் சிலர் ஏறி தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர்
தமக்கான போக்குவரத்து சேவைகளை சிறந்த முறையில் முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரி உள்ள போதிலும் , உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2589946814860382
What’s your Reaction?

