செய்திகள்

பொதுமக்களை கொல்லவிரும்பவில்லையாம் – சவேந்திர சில்வா

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு தான் விரும்பவில்லை, என ஓய்வு பெற்ற இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா தனது ஓய்விற்கு முன்னர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் 2022 அரகலய உட்பட தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ ஆபத்து ஏற்பட்டால் தேசத்தை பாதுகாப்பதற்காக தயாராகயிருக்கும் உத்தியோகபூர்வ இராணுவமே தேசத்தின் இராணுவம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கையில்

2022 எழுச்சி ஒரு உள்நாட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஆகக்குறைந்த பலத்தையே பயன்படுத்துமாறு நான் இராணுவீரர்களிற்கு உத்தரவிட்டேன்,

இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தினால் பொதுமக்களில் ஒருவர் கூட உயிரிழப்பதை நான் விரும்பவில்லை என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆயுதமேந்தாத பொதுமக்களை எனது அதிகாரத்தை பயன்படு;த்தி படுகொலை செய்யும் ஒருவனாக நான் மாறவிரும்பவில்லை,

அதன் காரணமாக நாடு குழப்பத்தில் சிக்கவில்லை, அயல்நாடுகளில் பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக கையாளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான விளைவுகள் இதற்கு சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றின் சதுரங்க காயாக மாறவேண்டும் அல்லது வெளிநாட்டு தூதரகத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கவேண்டும் என்ற நோக்கமும் எனக்கில்லை என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp