Tuesday, January 7, 2025
Homeசெய்திகள்வடக்கு மாகாண ஆணழகன் போட்டி

வடக்கு மாகாண ஆணழகன் போட்டி

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன் (டீழனல டிரடைனiபெ) மற்றும் பெண் உடலமைப்பு அழகி ( றுழஅநn phலளஙைரந) ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றன.

வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம்பெற்ற போட்டியில், வவுனியா னுகுஊ உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார் வுளுP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார்.

மூன்றாம் இடத்தை வவுனியா துசுP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சுகுமார் ரன்சித்குமார் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, பெண்கள் உடலமைப்பு அழகிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், வவுனியா னுகுஊ உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி வட மாகாண பெண் உடலமைப்பு அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை நியூ கெல்த் பிற்னஸ் சார்பாகப் போட்டியிட்ட மோனிசாh மகேந்திரராஜா பெற்றுக் கொண்டார்.

மூன்றாவது இடத்தை நோத் சென்ரர் உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜெயபாணி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments