உள்ளூர்

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் வைத்தியர் அருச்சுனாவின் கருத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் வைத்தியர் இராமநாதன் அர்சுனா உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும். மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து , பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டுவருவோம்.

தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டு உள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே தமிழ் மக்கள் மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

எமது போராட்டம் அரசியல் சார்பற்ற போராட்டமாக முன்னெடுத்தோம். அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை சுட்டி காட்டிய போது எனக்கு எதிராக திரும்பினார்கள்.

அப்போதே அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.

உண்மையான அரசியல் செய்ய நிதி தேவையில்லை. அரசியல் செய்ய எனக்கு இரண்டு வருடம் சம்பளம் போதும், மக்களுக்காக அரசியல் செய்ய பணம் தேவையில்லை. எனக்கு 10 கோடி ரூபாய் பெறுமதியான காணி இருக்கின்றது. அது எனக்கு போதும். மக்களிடம் பணம் பெற்றால் அது தொடர்பில் வெளிப்படை தன்மையாக செயற்படுவேன்  என  தெரிவித்திருந்தார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை