யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(20.10.2026) நடைபெற்றது.
அதன் போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நவராத்திரி நாட்களில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் நடைபெற்ற தோரணம் பின்னுதல், மாலை கட்டுதல், சைவ வினாவிடைப் போட்டி, கோலமிடுதல், கவிதை ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.


