யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பிரதம செயலாளரின் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பனை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உற்பத்தித் திறன் சார்ந்த உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டு உபகரணங்கள் , கருவிகளை வழங்கி வைத்ததுடன், பனைத் தொழில்துறையாளர்களைக் கௌரவித்து சான்றிதழ் மற்றும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர், பனை அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள், அச் சபையின் அதிகாரிகள், வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக் குழுவின் தலைவர் பிரகாஷ் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.


