உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அனோஜன் விவகாரம்  ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் மகஜர் கையளிப்பு..!

anojan issue jaffna councillor nm abdullah submits petition to japanese ambassador | Pathivu News

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) அவர்களிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் விசேட மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவரை, யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் நேரில் சந்தித்துக் கலந்தரையாடியபோதே இம்மகஜர் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, சவூதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் மரண தண்டனை அச்சுறுத்தல் குறித்துச் சர்வதேச இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பாகத் தானாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் முக்கிய அம்சங்களை மாநகரசபை உறுப்பினர் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். அத்துடன், அனோஜனின் உயிரைக் காப்பாற்ற யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத வலியுறுத்தல் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஊடக அறிக்கை பிரதி உள்ளிட்ட மகஜரையும் அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

மாநகரசபை உறுப்பினரின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா, இவ்விவகாரம் தொடர்பில் தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். அத்துடன், ஜப்பான் தூதரகம் ஊடாக இது குறித்து உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்ததுடன், தமிழ் இளைஞனொருவனின் உயிரைக் காக்க யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் முன்வந்துள்ள இத்தகைய மனிதாபிமான வலியுறுத்தலையும் பாராட்டி வரவேற்றார்.

அனோஜன் விவகாரத்தில் வெறுமனே ஊடக அறிக்கைகளுடன் நின்றுவிடாது, பல்வேறு சர்வதேச நாடுகளின் இலங்கைக்கான இராஜதந்திரிகளையும், தூதுவர்களையும் நேரில் சந்தித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் நிலைப் பாடுகளை வெளிப்படுத்தி மனுக்களைக் கையளித்து வரும் மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ்வின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் பலரதும் கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகின்றன.

இச் சந்திப்பின் போது மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் அவர்களுடன், யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் செல்வன் எஸ்.எம். சசான் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிருபர்
பாறுக் ஷிஹான்

Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊