செய்திகள்

தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் தெரிவு

e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81 e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aea9e0af8d e0aeaae0aea4e0aebfe0aeb2e0af8d | Pathivu News

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (28) கூடியது
இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது.

இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்தபோதும் 18 உறுப்பினர்கள் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது.

திரு மாவை சேனாதிராஜா கட்சியின் நன்மை கருதி அவரது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் தன்னுடைய ராஜினாவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் அவர்கள் கேட்டிருந்தார்கள்.

அதற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது.

இறுதியில் கட்சி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது.
மாவை சேனாதிராஜா கட்சியினுடைய அரசியல் குழுவின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார்.

கட்சியின் தலைவர் ராஜினாமா செய்தால் இன்னொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று எமது யாப்பிலும் உள்ளது

அந்த வகையில் எஞ்சிய காலத்துக்கு பதில் தலைவராக கட்சியினுடைய சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என்று ஏகமனதாக வாக்கெடுப்பு இல்லாமல் தீர்மானிக்கப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp