இந்த ஆண்டுக்கான குரு பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுக்கொண்ட, திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் மகா வித்தியாலய அதிபர் பி. ஜெயகாந்த் அவர்களுக்கு, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
நேற்று (12.10.2026) விநாயகபுரம் மகா வித்தியாலயத்திற்குச் சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர், குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட அதிபர் பி. ஜெயகாந்த் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, சிறப்பான சேவையை வழங்கிவரும் கல்வியாளர்களின் முயற்சிகளையும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இவ்வாறான விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதினைப் பெற்றுக்கொண்ட அதிபருக்குக் கல்விச் சமூகத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நிருபர்
ஜே.கே.யதுர்ஷன்
அம்பாறை, திருக்கோவில்
What’s your Reaction?

