அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/ அல்- மினா வித்தியாலயத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மற்றும் இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று(12.10.2026) பாடசாலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை உதவி அதிபர் MI.ஹாசீம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர் ஏ.எச்.பௌமி கலந்து கொண்டு பல்வேறுபட்ட விளக்கங்களை
முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மாரி ஆரம்பித்து உள்ளதால்
மழை நீர் தேங்கி நிற்கும் இடமெல்லாம்
டெங்கு நுளம்புகள் உருவாக்கும்.
ஆகவே உங்களது வீடுகள் பள்ளிவாசல்
கள் பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல்
இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.பூச்சாடிகள்
வீட்டின் கூரை யோக்கட்கப்,போத்தல்கள்
ஓலைகள்,மட்டைகள்,டயர்கள்,தகரப் பேணிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்காமல் நீங்கள் சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தமான நீரிலும்
டெங்கு நுளம்புகள் உருவாக்கும்.
டெங்கு காய்ச்சலின் தாக்கத்தில் இருந்து
நமது மாணவர் சமூதாயத்தை பாதுகாப்பது நமது எல்லோரினதும்
பொறுப்பும் கடமையுமாகும்.
மாணவர்கள் ஆகிய நீங்கள் கோதுமைப்
பண்டங்களில் இருந்து தயாரிக்கும்
உணவுப் பொருட்கள் மற்றும் துரித
உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடல் உள சுத்தங்களையும் கண்டிப்பாக மாணவர் கள் பேண வேண்டும்.
அரசாங்கத்தால் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சத்துணவினை
நீங்கள் கண்டிப்பாக உண்ண வேண்டும் இதனால் உடல் உள வளர்ச்சி ஏற்படுவ
துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் வழிவகுக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர்
MIM.றியாஸ், ஆரம்பப் பிரிவு வலயத் தலைவர் MSM.நஸீர், இத்திட்டத்திற்கு
பொறுப்பான ஆசிரியர் ALM.றஸ்மி உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்
றியாஸ் இஸ்மாயில்


