உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழக்கறிஞராக நியமனம்..!

kurukkalmadam mass grave case lawyer mubarak muazzam appointed prosecutor | Pathivu News

காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரின் தலைமையில் பாதிக்கப்பட்ட உறவுகளுடன் விசேட சந்திப்பு

பாதிக்கப்பட்ட 35 குடும்பங்கள் சத்தியவோலை மூலம் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்டரீதியாகப் வழக்கை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் இவ்வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் (J.P) தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுடனான விசேட கலந்தரையாடல் சம்மேளனக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது வழக்கின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை, ஏனைய முன்னெடுப்புகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகச் சமேளனத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் விரிவாக விளக்கமளித்தார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகக் குடும்ப உறவினர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்துச் சம்மேளனப் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் (ஹாபிழ், ஜமாலி) தெளிவுபடுத்தினார்.

பல்லாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்வழக்கினை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்று முதல் இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களிடமிருந்து எவ்வித பிரதிபலன்களையோ அல்லது பலாபலன்களையோ எதிர்பாராமல் தன்னார்வமாகச் செயற்பட்டு வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நிகழ்வில் முதன்மை உரையாற்றினார்.

வழக்கின் ஆரம்பகட்ட நகர்வுகள், தற்போதைய சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு அவர் தெளிவுபடுத்தியதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்தார்.

குறித்த வழக்கோடு சத்தியக்கடதாசி மூலம் இணைந்து கொண்டுள்ள பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களின் உறுப்பினர்கள், தம்மை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும், தமது நலன்களைப் பாதுகாத்துத் தொடர்ந்தும் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தமது சுய விருப்பின் அடிப்படையில் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கும் சத்தியவோலையினைச் சமாதான நீதவான் முன்னிலையில் நிறைவேற்றி வழங்கினர்.

இதற்கமைய, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமினாலும், அவரோடு இணைந்து அவரினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் சட்டத்தரணிகளினாலும் மட்டுமே இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிருபர்
பாறுக் ஷிஹான்

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊