உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல்..!

foundation laid for homes for families affected by cyclone in badulla | Pathivu News
டித்வா’ புயலினால் பதுளை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மற்றும் அதிக ஆபத்தான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கான காணி வசதிகளை அரசாங்கமே வழங்குவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளில் கந்தேகெட்டிய, சொரணாத்தொட்ட, ஹாலிஎல, பதுளை, பசறை மற்றும் மீகஹகியுல ஆகிய பிரதேசங்களில் 237 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக இன்று (7) கந்தேகெட்டிய மற்றும் சொரணாத்தோட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 68 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (08.10.2026) ஹாலிஎல, பதுளை மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளில் 123 வீடுகளுக்கும், 9 ஆம் திகதி மீகஹகியுல பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 46 வீடுகளுக்குமாக அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, பதுளை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் ஆகியன இணைந்து இந்த வீட்டுத்திட்டப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊